• Sep 20 2024

கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய போலந்து சென்ற அதிகாரிகள் குழு

Chithra / Sep 9th 2024, 12:56 pm
image

Advertisement

 

கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது.

இ-பாஸ்போர்ட் டெண்டரால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி அன்றைய தினம் இலங்கையில் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் பெறப்பட உள்ளன.

அதன் பிறகு, சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாடு மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகளைப் பெறும்.

புதிய வெற்று கடவுச்சீட்டில் முன் பக்கம் கறுப்பு நிறத்தில் போலந்தில் தயாரிக்கப்படுவதாகவும் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய போலந்து சென்ற அதிகாரிகள் குழு  கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது.இ-பாஸ்போர்ட் டெண்டரால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.இந்நிலையில் ஆன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதன்படி அன்றைய தினம் இலங்கையில் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் பெறப்பட உள்ளன.அதன் பிறகு, சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாடு மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகளைப் பெறும்.புதிய வெற்று கடவுச்சீட்டில் முன் பக்கம் கறுப்பு நிறத்தில் போலந்தில் தயாரிக்கப்படுவதாகவும் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் தெரிவித்திருந்தார்.இதன்படி, இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement