• Dec 21 2024

மாகாணசபை தேர்தலை நடத்துவதில் எல்லை நிர்ணய சிக்கல் - தீர்மானம் எடுக்க அவகாசம் கோரும் அரசு

Chithra / Dec 20th 2024, 12:25 pm
image


உள்ளுராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறும் என்றும் பழைய வேட்புமனுக்களுக்கு பதிலாக புதிய வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

தேர்தல் ஆணைக்குழு திகதி அறிவித்ததும் தேர்தலை நடத்துவற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, மாகாணசபை தேர்தலை நடத்துவதில் எல்லை நிர்ணய சிக்கல் இருப்பதாகவும், புதிய எல்லை நிர்ணயத்துக்கு செல்வது தொடர்பில் பாராளுமன்றத்தினூடாக இறுதி தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 

எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். 

மாகாணசபை தேர்தலை நடத்துவதில் எல்லை நிர்ணய சிக்கல் - தீர்மானம் எடுக்க அவகாசம் கோரும் அரசு உள்ளுராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறும் என்றும் பழைய வேட்புமனுக்களுக்கு பதிலாக புதிய வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழு திகதி அறிவித்ததும் தேர்தலை நடத்துவற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மாகாணசபை தேர்தலை நடத்துவதில் எல்லை நிர்ணய சிக்கல் இருப்பதாகவும், புதிய எல்லை நிர்ணயத்துக்கு செல்வது தொடர்பில் பாராளுமன்றத்தினூடாக இறுதி தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement