• Mar 15 2026

Fight கிளப்பாக மாறிய பிரசவ அறை; மருத்துவர்களிடையே மோதல் அதிர்ச்சியூட்டும் காணொளி!

shanu / Sep 17th 2025, 4:47 pm
image

Fight  கிளப்பாக மாறிய பிரசவ அறை என்று கூறும் அளவிற்கு மருத்துவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று காணொளியில் வெளிவந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 


மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள பிர்சா முண்டா அரசு மருத்துவக் கல்லூரியின் பிரசவ அறையில் மருத்துவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  


குறித்த மருத்துவக் கல்லூரியின் பிரசவ அறைக்குள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மருத்துவர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. 


இதன்போது பெண் மருத்துவர் ஒருவர் ஆவேசமாக சக மருத்துவரைத் தாக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. 


மருத்துவர்களிடையே இடம்பெற்ற தாக்குதல் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பலரும் பலவிதமாக விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். 


பிரசவ அறை என்பது ஒரு அரங்கம் அல்ல, குணப்படுத்தும் கோயில். உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கைகள் சண்டையிடுவதில் மும்முரமாக இருந்தன. நோயாளியின் நம்பிக்கை எங்கே இழக்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.


பயிற்சி மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா அல்லது மருத்துவத் தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டுமா? இவ்வாறு பலரும் தமது கருத்துக்களைப் பதிவிட்டு விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fight கிளப்பாக மாறிய பிரசவ அறை; மருத்துவர்களிடையே மோதல் அதிர்ச்சியூட்டும் காணொளி Fight  கிளப்பாக மாறிய பிரசவ அறை என்று கூறும் அளவிற்கு மருத்துவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று காணொளியில் வெளிவந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள பிர்சா முண்டா அரசு மருத்துவக் கல்லூரியின் பிரசவ அறையில் மருத்துவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  குறித்த மருத்துவக் கல்லூரியின் பிரசவ அறைக்குள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மருத்துவர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பெண் மருத்துவர் ஒருவர் ஆவேசமாக சக மருத்துவரைத் தாக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. மருத்துவர்களிடையே இடம்பெற்ற தாக்குதல் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பலரும் பலவிதமாக விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். பிரசவ அறை என்பது ஒரு அரங்கம் அல்ல, குணப்படுத்தும் கோயில். உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கைகள் சண்டையிடுவதில் மும்முரமாக இருந்தன. நோயாளியின் நம்பிக்கை எங்கே இழக்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.பயிற்சி மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா அல்லது மருத்துவத் தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டுமா இவ்வாறு பலரும் தமது கருத்துக்களைப் பதிவிட்டு விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement