• Nov 22 2024

வாகரையில் இறால் பண்ணைகள் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...!

Anaath / Jul 5th 2024, 6:22 pm
image

வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைகள் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைத்தல் என்பன போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடனும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

வாகரை கதிரை வெளி பிரதேசத்தில்  இயற்கை வளங்களை அழிக்கும் அதிகாரத்தை யார் உமக்கு கொடுத்தது என்ற தொனிப்பொருளிலேயே குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது கட்டுமுறிவு சந்தியில் இருந்து ஆரம்பமாகி கதிரவெளி தபால் கந்தோரை வரை இடம்பெற்றுள்ளதுடன் இதில்  ஆளுநரே மீனவர்களின் வாழ்வாதரத்தை அழிக்காதே,நன்னீரை கெடுத்து எமது கண்ணீரில் குழிக்காதே.வாகரையின் அழிவிற்கு விதை போடும் இறால் பண்ணைத் திட்டம் வேண்டாம்.அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்களை அழிக்காதே.இல்மனைட்டை அகழாதே.எம் நிலம் தாங்காது கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக நடந்து சென்று தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இறுதியில் மேற் குறித்த திட்டங்களை நிறுத்தம் செய்யும் முகமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தொயிப்படுத்தும் முகமாக 1000 கடிதங்களை அனுப்பும் திட்டத்தில் ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டோர்களின் கையொப்பம் அடங்கிய கடிதம் கதிரவெளி தபால் கந்தோர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேவேளை கதிரவெளியில் அமைக்கப்பட்டுள்ள இல்மனைட் தொழிற்சாலையின் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக மிக விரைவில் இம்மாதம் உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தொடர்வதற்கு சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிராகவும் நீதி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் மேற்படி அமைப்பின் பணிப்பாளர் கேமானந்த விதானகே இதன்போது தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வேலன் சுவாமி, சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலைய பணிப்பாளர் கேமானந்த விதானகே மட்டக்களப்பு சிவில் அமைப்பின் பிரதிநிதி சிவலோகநாதன் மற்றும் சமூகசேவைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வாகரையில் இறால் பண்ணைகள் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைகள் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைத்தல் என்பன போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடனும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.வாகரை கதிரை வெளி பிரதேசத்தில்  இயற்கை வளங்களை அழிக்கும் அதிகாரத்தை யார் உமக்கு கொடுத்தது என்ற தொனிப்பொருளிலேயே குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த கவனயீர்ப்பு போராட்டமானது கட்டுமுறிவு சந்தியில் இருந்து ஆரம்பமாகி கதிரவெளி தபால் கந்தோரை வரை இடம்பெற்றுள்ளதுடன் இதில்  ஆளுநரே மீனவர்களின் வாழ்வாதரத்தை அழிக்காதே,நன்னீரை கெடுத்து எமது கண்ணீரில் குழிக்காதே.வாகரையின் அழிவிற்கு விதை போடும் இறால் பண்ணைத் திட்டம் வேண்டாம்.அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்களை அழிக்காதே.இல்மனைட்டை அகழாதே.எம் நிலம் தாங்காது கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக நடந்து சென்று தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.இறுதியில் மேற் குறித்த திட்டங்களை நிறுத்தம் செய்யும் முகமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தொயிப்படுத்தும் முகமாக 1000 கடிதங்களை அனுப்பும் திட்டத்தில் ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டோர்களின் கையொப்பம் அடங்கிய கடிதம் கதிரவெளி தபால் கந்தோர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேவேளை கதிரவெளியில் அமைக்கப்பட்டுள்ள இல்மனைட் தொழிற்சாலையின் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக மிக விரைவில் இம்மாதம் உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தொடர்வதற்கு சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிராகவும் நீதி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் மேற்படி அமைப்பின் பணிப்பாளர் கேமானந்த விதானகே இதன்போது தெரிவித்தார்.இப்போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வேலன் சுவாமி, சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலைய பணிப்பாளர் கேமானந்த விதானகே மட்டக்களப்பு சிவில் அமைப்பின் பிரதிநிதி சிவலோகநாதன் மற்றும் சமூகசேவைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement