• Jul 08 2024

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரிஷி சுனக்...!

Anaath / Jul 5th 2024, 5:41 pm
image

Advertisement

பிரிட்டன் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ம் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாக ரிஷி சுனக் அறிவித்தார்.

விரைவில் பிரிட்டன் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததற்கான கடிதத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இம்முறை இடம்பெற்றுள்ள 2024 பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தோல்வியடைந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், கியெர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றிபெற்றாலே போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சி 400க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் குறித்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரிஷி சுனக். பிரிட்டன் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ம் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாக ரிஷி சுனக் அறிவித்தார்.விரைவில் பிரிட்டன் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததற்கான கடிதத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,இம்முறை இடம்பெற்றுள்ள 2024 பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தோல்வியடைந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், கியெர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றிபெற்றாலே போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சி 400க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது இந்நிலையில் குறித்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement