• Oct 26 2024

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்..!

Sharmi / Oct 26th 2024, 9:43 am
image

Advertisement

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் காலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெற்றது.

விசைப்படகு சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மீனவ அமைப்புக்கள் கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் அதில் பயணித்த 16 மீனவர்களை இலங்கைக்கு கடற்கரை சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கையின் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசு அரசுடைமையாக்கிய விசைப்படகுகளுக்கு மத்திய மாநில அரசு இழப்பீடு வழங்க கோரியும்,  இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசு கண்டித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் காலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெற்றது.விசைப்படகு சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மீனவ அமைப்புக்கள் கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் அதில் பயணித்த 16 மீனவர்களை இலங்கைக்கு கடற்கரை சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கையின் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசு அரசுடைமையாக்கிய விசைப்படகுகளுக்கு மத்திய மாநில அரசு இழப்பீடு வழங்க கோரியும்,  இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசு கண்டித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement