• May 06 2024

புத்தளம் மாவட்ட காதியாரை இடம்மாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / Jan 11th 2024, 3:03 pm
image

Advertisement

புத்தளம் மாவட்டத்திற்கான காதியாரை மாற்றுமாறு கோரி பெண்கள் நீதி அமைப்பினரினால் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்திற்கான கடமையாற்றும் காதியாரை புத்தளம் காதி நீதிமன்றத்திலிருந்து விலக்கி புதிய ஒரு காதி நீதிபதையை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை பெண்கள் நீதி அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின்  தந்தைகள், மற்றும் சகோதரர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த நீதிபதியை விலக்குமாறு கோரியும் புதிய நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் அமைதியான முறைமுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை புத்தளம் விவசாயத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக காதி நீதிமன்றம் வரை சென்று மீண்டும் விவசாயத் திணைக்களத்திற்கு முன்பாக சென்றடைந்தது.

பதாதைகளில் நீதிமன்றச் சேவை ஆனைக்குழுவில் முறையிட்டும் விசாரிக்கப்படாதது என்ன காரணம்?, மனநோய் கொண்ட காதியினால் கொலை செய்யப்படுகின்றது.

குறித்த காதி நீதிபதி இஸ்லாம் மார்கத்திற்கு முறையற்ற தீர்ப்புகளை வழங்குவதாகவும் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வழங்காமலே ஒரு மாதத்திற்குள்ளே இன்னொரு திருமணம் முடிப்பதற்காக அனுமதி வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நீதிக்கேட்டு வருகின்ற பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்குவதாகவும் இரவு நேரங்களில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுகம் விசாரிப்பதாகவும் வழக்குக்கு வரும்பொழுது தனியாக வருமாறு தெரிவிப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிகத் தொகைப் பெருவதாகவும், அவரது மின்சாரக் கட்டணங்களை செலுத்துமாறு கோரியும், அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருமாறு பலாத்காரமாக கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் இவரைப்பற்றி காதி நீதிச் சேவை ஆனைக்குழு நிறைய உலமா சபை ஜம்மியத்துல் உலமா பெரியபள்ளி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும்  நாங்கள் தகவல்களை அனுப்பி வைத்துள்ளோம்.

இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான தீர்வும் முடிவும் இல்லை.

காதி நீதிச்சேவை ஆனைக்குழு ஏன் இதுவரைக்கும் தீர்வு வழங்காமல் இருக்கின்றது. இதற்கு என்ன காரணம் ஒரு வேளை அவரது குற்றங்களுக்கு இவர்களும் துணைப் போகின்றார்களா என்று எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.




புத்தளம் மாவட்ட காதியாரை இடம்மாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.samugammedia புத்தளம் மாவட்டத்திற்கான காதியாரை மாற்றுமாறு கோரி பெண்கள் நீதி அமைப்பினரினால் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டது.புத்தளம் மாவட்டத்திற்கான கடமையாற்றும் காதியாரை புத்தளம் காதி நீதிமன்றத்திலிருந்து விலக்கி புதிய ஒரு காதி நீதிபதையை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தை பெண்கள் நீதி அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின்  தந்தைகள், மற்றும் சகோதரர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.குறித்த நீதிபதியை விலக்குமாறு கோரியும் புதிய நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் அமைதியான முறைமுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை புத்தளம் விவசாயத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக காதி நீதிமன்றம் வரை சென்று மீண்டும் விவசாயத் திணைக்களத்திற்கு முன்பாக சென்றடைந்தது.பதாதைகளில் நீதிமன்றச் சேவை ஆனைக்குழுவில் முறையிட்டும் விசாரிக்கப்படாதது என்ன காரணம், மனநோய் கொண்ட காதியினால் கொலை செய்யப்படுகின்றது.குறித்த காதி நீதிபதி இஸ்லாம் மார்கத்திற்கு முறையற்ற தீர்ப்புகளை வழங்குவதாகவும் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வழங்காமலே ஒரு மாதத்திற்குள்ளே இன்னொரு திருமணம் முடிப்பதற்காக அனுமதி வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் நீதிக்கேட்டு வருகின்ற பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்குவதாகவும் இரவு நேரங்களில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுகம் விசாரிப்பதாகவும் வழக்குக்கு வரும்பொழுது தனியாக வருமாறு தெரிவிப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிகத் தொகைப் பெருவதாகவும், அவரது மின்சாரக் கட்டணங்களை செலுத்துமாறு கோரியும், அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருமாறு பலாத்காரமாக கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் இவரைப்பற்றி காதி நீதிச் சேவை ஆனைக்குழு நிறைய உலமா சபை ஜம்மியத்துல் உலமா பெரியபள்ளி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும்  நாங்கள் தகவல்களை அனுப்பி வைத்துள்ளோம். இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான தீர்வும் முடிவும் இல்லை.காதி நீதிச்சேவை ஆனைக்குழு ஏன் இதுவரைக்கும் தீர்வு வழங்காமல் இருக்கின்றது. இதற்கு என்ன காரணம் ஒரு வேளை அவரது குற்றங்களுக்கு இவர்களும் துணைப் போகின்றார்களா என்று எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement