• Jun 28 2024

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

Tharun / Jun 24th 2024, 8:40 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று(24) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டது.கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு மேலும் காலம் தாழ்த்தாது இலங்கையின் அரசாங்கத்தை சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்குட்படுத்தி நீதியை பெற்றுத்தருமாறு சர்வதேச நாடுகள், மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களையும் வேண்டி நிற்பதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று(24) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது, சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டது.கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு மேலும் காலம் தாழ்த்தாது இலங்கையின் அரசாங்கத்தை சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்குட்படுத்தி நீதியை பெற்றுத்தருமாறு சர்வதேச நாடுகள், மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களையும் வேண்டி நிற்பதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement