• Oct 08 2024

கிளிநொச்சி நகரின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Chithra / Oct 8th 2024, 3:03 pm
image

Advertisement

 

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்  இன்று(08) செவ்வாய்கிழமை கிளிநொச்சி நகர்ப்புற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

"டெங்கு வருமுன் காப்போம்" என்னும் தொனிப்பொருளில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  A9 பிரதான சாலையை மையமாகக் கொண்ட முக்கிய பகுதிகளை டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல திணைக்களங்கள் இணைந்து   கிளிநொச்சி நகர் பகுதியின் முக்கியமான நான்கு இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி காலை 9.00மணிக்கு ஆரம்பிக்கப்படது.

குழு 01 கரடிப்போக்கு சந்தியிலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகம் வரையும், குழு 02 கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்திலிருந்து டிப்போ சந்தி வரையும், குழு 03 டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் சந்தி வரையும், குழு 04 டிப்போ சந்தியிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரையான இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகளை பரவலாக முன்னெடுத்திருந்தனர்.

இதனை விட  பூநகரி பிரதேச செயலகத்தினர் பூநகரி நகர் பகுதியையும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினர் பளை மற்றும் இயக்கச்சி நகர் பகுதிகளையும், கண்டாவளை பிரதேச செயலகத்தினர் பரந்தன் நகர் பகுதியையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பல திணைக்களங்களோடு இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை   முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கரைச்சி பிரதேச செயலகம், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,  பாதுகாப்புத் துறையினர், கரைச்சி பிரதேச சபையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புகள், சமூக தொண்டர் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து சிரமதான முறையில் இந்த வேலைத்திட்டதினை முன்னெடுத்தனர்.

இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களான குப்பைகள், பொலித்தீன்  பைகள் வெற்றுப் போத்தல்கள் உள்ளிட்ட நீர் தேங்கக் கூடிய இடங்கள் இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு பெருமளவான  திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையினரின்  உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும் இதன்போது இவ் நோயின் தாக்கம் தொடர்பாக அடங்கிய கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை பிரதேச செயலர் ரீதியாக தொடர்ந்தும்  முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது


கிளிநொச்சி நகரின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை  கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்  இன்று(08) செவ்வாய்கிழமை கிளிநொச்சி நகர்ப்புற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது."டெங்கு வருமுன் காப்போம்" என்னும் தொனிப்பொருளில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  A9 பிரதான சாலையை மையமாகக் கொண்ட முக்கிய பகுதிகளை டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பல திணைக்களங்கள் இணைந்து   கிளிநொச்சி நகர் பகுதியின் முக்கியமான நான்கு இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி காலை 9.00மணிக்கு ஆரம்பிக்கப்படது.குழு 01 கரடிப்போக்கு சந்தியிலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகம் வரையும், குழு 02 கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்திலிருந்து டிப்போ சந்தி வரையும், குழு 03 டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் சந்தி வரையும், குழு 04 டிப்போ சந்தியிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரையான இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகளை பரவலாக முன்னெடுத்திருந்தனர்.இதனை விட  பூநகரி பிரதேச செயலகத்தினர் பூநகரி நகர் பகுதியையும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினர் பளை மற்றும் இயக்கச்சி நகர் பகுதிகளையும், கண்டாவளை பிரதேச செயலகத்தினர் பரந்தன் நகர் பகுதியையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பல திணைக்களங்களோடு இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை   முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கரைச்சி பிரதேச செயலகம், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,  பாதுகாப்புத் துறையினர், கரைச்சி பிரதேச சபையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புகள், சமூக தொண்டர் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து சிரமதான முறையில் இந்த வேலைத்திட்டதினை முன்னெடுத்தனர்.இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களான குப்பைகள், பொலித்தீன்  பைகள் வெற்றுப் போத்தல்கள் உள்ளிட்ட நீர் தேங்கக் கூடிய இடங்கள் இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு பெருமளவான  திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையினரின்  உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.மேலும் இதன்போது இவ் நோயின் தாக்கம் தொடர்பாக அடங்கிய கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டன.கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை பிரதேச செயலர் ரீதியாக தொடர்ந்தும்  முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement