நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் “டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை பிரகடனப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் நோக்கில், கடந்த 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, டெங்கு பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் நுளம்பு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களை இல்லங்களிலும் பொது இடங்களிலும் அகற்றுவதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் “டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை பிரகடனப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது நாடு முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் நோக்கில், கடந்த 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் தொடர்ச்சியாக, டெங்கு பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் நுளம்பு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களை இல்லங்களிலும் பொது இடங்களிலும் அகற்றுவதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.