நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தென்மேற்கு பருவமழை காரணமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு 600 ஆக இருந்த தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை, தற்போது 1,000 ஐத் தாண்டியுள்ளது.இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும்.
இந்த ஆண்டில் இதுவரை 56,426 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 22,000 நோயாளிகளும், மே மாதத்தில் 8,500 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.
பதிவான நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.மேலும் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது.
தற்போது நாடு முழுவதும் 124 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்
இந்நிலையில் ஹோமாகம பேருந்து டிப்போ வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்பட்டமை காரணமாக, அந்த டிப்போவுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிடிபன பொதுச் சுகாதார பரிசோதகரினால் நீதவான் நீதிமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், டிப்போ வளாகத்தை சுத்தம் செய்யுமாறு அறிவித்து நான்கு (04) தடவைகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டிருந்தமையும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக, கொழும்பிலுள்ள கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மூடப்பட்டுள்ள குறித்த பல்கலைக்கழகம் எதிர்வரும் 13 ஆம் திகதி மீள திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தீவிரமடையும் டெங்கு: 124 சுகாதார பிரிவுகள் அதிக அபாயத்தில் - ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு 25,000 ரூபா அபராதம் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்தென்மேற்கு பருவமழை காரணமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு 600 ஆக இருந்த தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை, தற்போது 1,000 ஐத் தாண்டியுள்ளது.இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டில் இதுவரை 56,426 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 22,000 நோயாளிகளும், மே மாதத்தில் 8,500 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.பதிவான நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.மேலும் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகிறது.தற்போது நாடு முழுவதும் 124 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்தார் இந்நிலையில் ஹோமாகம பேருந்து டிப்போ வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்பட்டமை காரணமாக, அந்த டிப்போவுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார். ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிடிபன பொதுச் சுகாதார பரிசோதகரினால் நீதவான் நீதிமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், டிப்போ வளாகத்தை சுத்தம் செய்யுமாறு அறிவித்து நான்கு (04) தடவைகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டிருந்தமையும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.இதேவேளை, டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக, கொழும்பிலுள்ள கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, மூடப்பட்டுள்ள குறித்த பல்கலைக்கழகம் எதிர்வரும் 13 ஆம் திகதி மீள திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.