• May 03 2024

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்...!மக்களே அவதானம்...! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Dec 7th 2023, 2:18 pm
image

Advertisement

யாழ் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் சில வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவிலான பொது மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

3 நாட்கள் காய்ச்சல் மற்றும் தலைவலி மூட்டு மற்றும் தசைகளில் நோவு வயிற்று வலி வாந்திபேதி போன்ற நோய் அறிகுறி காணப்படுமாயின் வைத்திய ஆலோசனை பெற்று குருதி பரிசோதனை செய்து டெங்கு இல்லை என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்

டெங்கு நோய் உறுதிப்படுத்தப்பட்டால் தகுதியான வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் உள்ள தொடர் மருத்துவ கண்காணிப்பு வழங்க கூடிய வைத்தியசாலைகளில் அனுமதி பெற்று சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்

தகுதி பெறாத மற்றும் அனுமதிக்கப்படாத தொடர்கண்காணிப்பு இல்லாத வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்.மக்களே அவதானம். பணிப்பாளர் சத்தியமூர்த்தி வேண்டுகோள்.samugammedia யாழ் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், யாழ் மாவட்டத்தில் சில வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவிலான பொது மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் 3 நாட்கள் காய்ச்சல் மற்றும் தலைவலி மூட்டு மற்றும் தசைகளில் நோவு வயிற்று வலி வாந்திபேதி போன்ற நோய் அறிகுறி காணப்படுமாயின் வைத்திய ஆலோசனை பெற்று குருதி பரிசோதனை செய்து டெங்கு இல்லை என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் டெங்கு நோய் உறுதிப்படுத்தப்பட்டால் தகுதியான வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் உள்ள தொடர் மருத்துவ கண்காணிப்பு வழங்க கூடிய வைத்தியசாலைகளில் அனுமதி பெற்று சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் தகுதி பெறாத மற்றும் அனுமதிக்கப்படாத தொடர்கண்காணிப்பு இல்லாத வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement