வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திர, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நேற்று (ஜூலை 9) மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. விஜயத்தின்போது, கந்தளாய் தள வைத்தியசாலையின் மருந்து பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அடுத்த ஆண்டுக்குத் தேவையான மருந்துகளை இந்த ஆண்டிலேயே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருந்துத் தட்டுப்பாட்டை முன்கூட்டியே தவிர்த்து, நோயாளிகளுக்குத் தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார். குறிப்பாக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை சுகாதார சேவைகளில் பெரும் சவாலாக இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் சுகாதார சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
கந்தளாய் தள வைத்தியசாலையில் வெளிவிவகார பிரதி அமைச்சர் திடீர் விஜயம் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திர, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நேற்று (ஜூலை 9) மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. விஜயத்தின்போது, கந்தளாய் தள வைத்தியசாலையின் மருந்து பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.அடுத்த ஆண்டுக்குத் தேவையான மருந்துகளை இந்த ஆண்டிலேயே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருந்துத் தட்டுப்பாட்டை முன்கூட்டியே தவிர்த்து, நோயாளிகளுக்குத் தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.மேலும், சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார். குறிப்பாக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை சுகாதார சேவைகளில் பெரும் சவாலாக இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் சுகாதார சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.