• Jan 26 2025

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி செயற்றிட்டங்கள்; தற்காலிகமாக நிறுத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்..!

Sharmi / Jan 4th 2025, 12:25 pm
image

மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்  என மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை   ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க  விடுத்துள்ளார்.

மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றையதினம்(03) பிற்பகல் 2 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு  அகற்றுதலில் உள்ள சிக்கல்கள், காற்றாலை மின்சார திட்டம், மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காற்றாலை திட்டத்தினை விளக்குவதற்கு அத்திட்டத்தின் முகாமையாளர்  முயன்ற போது கிராம மட்ட பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் போது காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மக்கள் விரும்பாத ஒரு செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது .

எனவே இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கை தொடருமாயின் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். 

எனவே அதை நிறுத்துவது சிறந்தது. மேலும் எதிர் வருகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடையங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப்  ஏற்பாட்டில் மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,துரைராசா ரவிகரன்,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,சகல திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  கிராம மட்ட பிரதிநிதிகள், ,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் சமூகத் தலைவர்கள், மதத் தலைவர் கலந்து கொண்டனர்.

மேலும் மன்னார் நகர சபையினால் அகழ்வு செய்யப்படுகின்ற மனித மற்றும் திண்மக்கழிவுகள் பாப்பாமோட்டை இல் உள்ள நிலையத்தில் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில்,குறித்த நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக நீண்ட காலமாக மன்னார் நகர சபையினால் உரிய முறையில் கழிவு அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்ட போதிலும் தற்போது மனித கழிவுகள் அகற்றப்பட்டு குறித்த நிலையத்தில் சேகரிக்க நீதிமன்றத்தினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் திண்ம கழிவுகளை அகழ்வு செய்கின்ற போதும் அதை கொட்டுவதற்கு உரிய இடம் இல்லை என மன்னார் நகர சபையின் செயலாளரினால் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது.


மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி செயற்றிட்டங்கள்; தற்காலிகமாக நிறுத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம். மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்  என மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை   ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க  விடுத்துள்ளார்.மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றையதினம்(03) பிற்பகல் 2 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு  அகற்றுதலில் உள்ள சிக்கல்கள், காற்றாலை மின்சார திட்டம், மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதன் போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காற்றாலை திட்டத்தினை விளக்குவதற்கு அத்திட்டத்தின் முகாமையாளர்  முயன்ற போது கிராம மட்ட பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதன் போது காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மக்கள் விரும்பாத ஒரு செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது .எனவே இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இந்த காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் இந்த நடவடிக்கை தொடருமாயின் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே அதை நிறுத்துவது சிறந்தது. மேலும் எதிர் வருகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடையங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப்  ஏற்பாட்டில் மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,துரைராசா ரவிகரன்,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,சகல திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  கிராம மட்ட பிரதிநிதிகள், ,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் சமூகத் தலைவர்கள், மதத் தலைவர் கலந்து கொண்டனர்.மேலும் மன்னார் நகர சபையினால் அகழ்வு செய்யப்படுகின்ற மனித மற்றும் திண்மக்கழிவுகள் பாப்பாமோட்டை இல் உள்ள நிலையத்தில் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில்,குறித்த நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக நீண்ட காலமாக மன்னார் நகர சபையினால் உரிய முறையில் கழிவு அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்ட போதிலும் தற்போது மனித கழிவுகள் அகற்றப்பட்டு குறித்த நிலையத்தில் சேகரிக்க நீதிமன்றத்தினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.எனினும் திண்ம கழிவுகளை அகழ்வு செய்கின்ற போதும் அதை கொட்டுவதற்கு உரிய இடம் இல்லை என மன்னார் நகர சபையின் செயலாளரினால் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement