• May 09 2025

பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட விவகாரம் - சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Thansita / May 8th 2025, 8:14 pm
image

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இவர்  மாணவியை கடத்தி கப்பம் பெறும் நோக்கில் குறித்த செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், பொலிஸாரினால் சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து, சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட விவகாரம் - சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த சந்தேகநபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். இவர்  மாணவியை கடத்தி கப்பம் பெறும் நோக்கில் குறித்த செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், பொலிஸாரினால் சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து, சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement