• May 08 2025

கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு - ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அமைச்சு உறுதி

Thansita / May 8th 2025, 6:40 pm
image

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில்  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை தற்காலிகமாக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினத்துக்குள் அவரை  பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் பிரேம ரஞ்சித் தேவபந்து உறுதியளித்துள்ளார்.

அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபரை கல்வி அமைச்சுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. 

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு - ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அமைச்சு உறுதி கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில்  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை தற்காலிகமாக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினத்துக்குள் அவரை  பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் பிரேம ரஞ்சித் தேவபந்து உறுதியளித்துள்ளார்.அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபரை கல்வி அமைச்சுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement