யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா இன்று (28) பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வசந்த மண்டப பூசைகளைத் தொடர்ந்து, நாகபூசணி அம்பாள், விநாயகப் பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் உள்வீதியில் வலம்வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் முதல் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாவது தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் வலம்வந்ததுடன், மூன்றாவது தேரில் நாகபூசணி அம்பாள் எழுந்தருளி பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொண்டார்.
திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் பாட்டுக்காவடி, பால்காவடி, தூக்குக்காவடி, கற்பூரச்சட்டி மற்றும் பாற்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி தமது பக்தியை வெளிப்படுத்தினர்.
தேர் திருவிழாவைக் காணவும், வழிபாடுகளில் பங்கேற்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நயினாதீவில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிய பக்தர்கள் - நயினாதீவில் கோலாகல தேர் திருவிழா யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா இன்று (28) பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வசந்த மண்டப பூசைகளைத் தொடர்ந்து, நாகபூசணி அம்பாள், விநாயகப் பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் உள்வீதியில் வலம்வந்தனர்.அதனைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் முதல் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாவது தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் வலம்வந்ததுடன், மூன்றாவது தேரில் நாகபூசணி அம்பாள் எழுந்தருளி பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொண்டார்.திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் பாட்டுக்காவடி, பால்காவடி, தூக்குக்காவடி, கற்பூரச்சட்டி மற்றும் பாற்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி தமது பக்தியை வெளிப்படுத்தினர். தேர் திருவிழாவைக் காணவும், வழிபாடுகளில் பங்கேற்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நயினாதீவில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.