பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பசில் ராஜபக்ஷவுக்குப் பின்னர் தற்போது வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தம்மிக்க பெரேரா பொருத்தமானவர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியலமைப்பின்படி, அதன் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே தம்மிக் பெரேராவை தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு இந்தக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
பசில் ராஜபக்ஷவுக்குப் பின் வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தம்மிக்க பெரேரா. பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.பசில் ராஜபக்ஷவுக்குப் பின்னர் தற்போது வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தம்மிக்க பெரேரா பொருத்தமானவர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியலமைப்பின்படி, அதன் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டியுள்ளனர். இந்நிலையிலேயே தம்மிக் பெரேராவை தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு இந்தக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதேவேளை, வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.