மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களாக்கள் சிதிலமடைந்துள்ளதால் எம்.பிக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில பங்களாக்களின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சிதைந்து உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பழைய வீடுகள் எம்.பி. பங்களாக்களாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எம்.பி.க்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவற்றில் போதுமான வசதிகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஒரு பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல பாராளுமன்றக் குடியிருப்புக்கு குடிபெயர்வதற்கு முன்பு வீடுகள் ஓரளவுக்குப் புதுப்பிக்கப்பட்டதாகக் தெரிவித்தனர்.
மேலும், புதுப்பிக்க வேண்டிய வீடுகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக, அவற்றுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிதிலமடைந்து காணப்படும் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களாக்கள் மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களாக்கள் சிதிலமடைந்துள்ளதால் எம்.பிக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சில பங்களாக்களின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சிதைந்து உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பழைய வீடுகள் எம்.பி. பங்களாக்களாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எம்.பி.க்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பாராளுமன்ற அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இவற்றில் போதுமான வசதிகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இது குறித்து ஒரு பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல பாராளுமன்றக் குடியிருப்புக்கு குடிபெயர்வதற்கு முன்பு வீடுகள் ஓரளவுக்குப் புதுப்பிக்கப்பட்டதாகக் தெரிவித்தனர்.மேலும், புதுப்பிக்க வேண்டிய வீடுகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக, அவற்றுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.