• Nov 06 2024

திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Sep 26th 2024, 3:33 pm
image

Advertisement

தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஊரெழுவில் பிறந்தவர்.தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய அவர் ஐந்து அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி அகிம்சை ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்தார்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ - பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு - நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு. தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஊரெழுவில் பிறந்தவர்.தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய அவர் ஐந்து அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி அகிம்சை ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்தார்.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ - பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு - நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement