• Sep 22 2024

தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை வழங்க முடியாது - நீதிமன்றம் அறிவிப்பு samugammedia

Chithra / Oct 10th 2023, 10:18 am
image

Advertisement

 

மர்மமாக கொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என, மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் வைத்திய குழாம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் உடல் மீதான பரிசோதனைகள் தொடர்ந்தும் நடாத்தப்படவுள்ளமையினால், சடலத்தை தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது என வைத்தியர்கள், நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகள்  முடிவடைந்திருந்தால், சடலத்தை தம்மிடம் கையளிக்குமாறு, உறவினர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

எனினும், சடலத்தை வழங்க முடியாது என பரிசோதனைகளை நடாத்தும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திர ஜயசூரிய அறிவித்துள்ளார்.

தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை வழங்க முடியாது - நீதிமன்றம் அறிவிப்பு samugammedia  மர்மமாக கொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என, மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் வைத்திய குழாம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.தினேஷ் ஷாஃப்டரின் உடல் மீதான பரிசோதனைகள் தொடர்ந்தும் நடாத்தப்படவுள்ளமையினால், சடலத்தை தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது என வைத்தியர்கள், நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.வைத்திய பரிசோதனைகள்  முடிவடைந்திருந்தால், சடலத்தை தம்மிடம் கையளிக்குமாறு, உறவினர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.எனினும், சடலத்தை வழங்க முடியாது என பரிசோதனைகளை நடாத்தும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திர ஜயசூரிய அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement