• Nov 25 2024

இலங்கை மக்களுக்கு பேரிடி..! அறிமுகமாகவுள்ள புதிய வரிகள் - IMF வெளியிட்ட தகவல்

IMF
Chithra / Jun 19th 2024, 10:30 am
image

 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வை அடுத்து சர்வதேச நாணய நிதியம் பல முக்கிய வரி சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது.

இதற்கமைய, டிஜிட்டல் சேவையுடன் தொடர்புபட்ட துறைகளிற்கும் பெறுமதி சேர் வரியை (VAT) அறவிடுதலும், 

ஏற்றுமதி சேவைகளிற்கு தற்போது விதிக்கப்படும் வருமான வரியில் விலக்களிக்கப்படுவதும் முக்கிய திருத்தங்களாக கூறப்படுகின்றது.

மேலும், விற்பனைச் செயற்பாடுகளுக்கு அறவிடப்படும் சமூக பாதுகாப்பு வரிக்கு பதிலாக பெறுமதி சேர் வரியும்அறவிடப்படக் கூடும்.

இதேவேளை மதுபானம், புகையிலை மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு அறவிடப்படும் வர்த்தக வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய, இவ்வாறான பல புதிய வரிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களுக்கு பேரிடி. அறிமுகமாகவுள்ள புதிய வரிகள் - IMF வெளியிட்ட தகவல்  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வை அடுத்து சர்வதேச நாணய நிதியம் பல முக்கிய வரி சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது.இதற்கமைய, டிஜிட்டல் சேவையுடன் தொடர்புபட்ட துறைகளிற்கும் பெறுமதி சேர் வரியை (VAT) அறவிடுதலும், ஏற்றுமதி சேவைகளிற்கு தற்போது விதிக்கப்படும் வருமான வரியில் விலக்களிக்கப்படுவதும் முக்கிய திருத்தங்களாக கூறப்படுகின்றது.மேலும், விற்பனைச் செயற்பாடுகளுக்கு அறவிடப்படும் சமூக பாதுகாப்பு வரிக்கு பதிலாக பெறுமதி சேர் வரியும்அறவிடப்படக் கூடும்.இதேவேளை மதுபானம், புகையிலை மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு அறவிடப்படும் வர்த்தக வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய, இவ்வாறான பல புதிய வரிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement