• Sep 20 2024

வீதிகளில் மற்றும் வீடுகளில் ஏற்படும் அனர்த்தங்கள்; சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Apr 14th 2023, 11:19 am
image

Advertisement

புத்தாண்டின் போது விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வீதிகளில் மற்றும் வீடுகளில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பயிற்சியளிக்கும் அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்சா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிவேக வீதி மற்றும் பெருந்தெருக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அதிவேக வீதிகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால் அது தொடர்பில் 1969 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வீ.எஸ் வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது பல்வேறு ஆபத்துகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த விளையாட்டுகளை எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது .

வீதிகளில் மற்றும் வீடுகளில் ஏற்படும் அனர்த்தங்கள்; சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு samugammedia புத்தாண்டின் போது விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.வீதிகளில் மற்றும் வீடுகளில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பயிற்சியளிக்கும் அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்சா கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அதிவேக வீதி மற்றும் பெருந்தெருக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.அதிவேக வீதிகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால் அது தொடர்பில் 1969 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வீ.எஸ் வீரகோன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது பல்வேறு ஆபத்துகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த விளையாட்டுகளை எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement