பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் , பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி நளாயினி இன்பராஜ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெத்தர தந்திரி, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோன்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக கடமையாற்றும் பொலிஸாருக்கு கலந்துரையாடல் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் , பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி நளாயினி இன்பராஜ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெத்தர தந்திரி, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோன்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.