• Dec 09 2024

இருவருக்கிடையில் எல்லை மீறிய தகராறு - ஒருவர் கொலை!

Chithra / Sep 19th 2024, 11:56 am
image

 

கொடகவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பல்யாய பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொடகவல பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. 

உடுகும்புர ஹபுகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் கொடகவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொடகவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொடகவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருவருக்கிடையில் எல்லை மீறிய தகராறு - ஒருவர் கொலை  கொடகவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பல்யாய பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொடகவல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. உடுகும்புர ஹபுகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.தாக்குதலில் காயமடைந்தவர் கொடகவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொடகவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொடகவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement