• Sep 08 2024

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி...!நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை...! மஹிந்த அதிரடி அறிவிப்பு...!

Sharmi / May 17th 2024, 10:04 am
image

Advertisement

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்  தலைமையகத்தில் நேற்றையதினம்(16)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை.

அதேவேளை பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி.நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை. மஹிந்த அதிரடி அறிவிப்பு. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்  தலைமையகத்தில் நேற்றையதினம்(16)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை.அதேவேளை பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement