முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகமானது புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் புதியதோர் எண்ணக்கருவாகும் - பிரதமர் தெரிவிப்பு...!
முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம் மூலம் கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன,
கடந்த காலங்களில் எமது நாட்டில் வீடு வீடாக பிரபலமாக இருந்துவந்த வருமான வழியான கோழி வளர்ப்பு மற்றும் முட்டை வியாபாரத் திட்டத்தை கிராம மட்டத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடரில் இத்திட்டம் இன்று இந்த பிரதேசத்திற்கு பொறுப்பளிக்கப்படுகிறது. இங்கு நடப்பது என்னவென்றால், நல்ல அனுபவம் உள்ள ஒருவரை அந்த அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுத்துவதுதான். இங்கு வழங்கப்படும் பயிற்சிக்குப் பின்னர், அந்தத் தொழிலுக்கு உதவும் இயந்திரம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதன் மூலம் கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம். வீட்டில் ஓரளவு வருமானத்தை ஈட்ட முடியும் மற்றும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு போசனையான முட்டையைப் பெற முடியும். இந்த நாட்டில் சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் சீனக் குடியரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.
புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதிய எண்ணக்கருவுக்கு இதன் மூலம் பெரும் பலம் கிடைக்கிறது. நாம் பெற்ற அறிவை இளைஞர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்காக வழங்க முடியும். என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகமானது புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் புதியதோர் எண்ணக்கருவாகும் - பிரதமர் தெரிவிப்பு. முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம் மூலம் கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.இதன் போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, கடந்த காலங்களில் எமது நாட்டில் வீடு வீடாக பிரபலமாக இருந்துவந்த வருமான வழியான கோழி வளர்ப்பு மற்றும் முட்டை வியாபாரத் திட்டத்தை கிராம மட்டத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடரில் இத்திட்டம் இன்று இந்த பிரதேசத்திற்கு பொறுப்பளிக்கப்படுகிறது. இங்கு நடப்பது என்னவென்றால், நல்ல அனுபவம் உள்ள ஒருவரை அந்த அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுத்துவதுதான். இங்கு வழங்கப்படும் பயிற்சிக்குப் பின்னர், அந்தத் தொழிலுக்கு உதவும் இயந்திரம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.இதன் மூலம் கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம். வீட்டில் ஓரளவு வருமானத்தை ஈட்ட முடியும் மற்றும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு போசனையான முட்டையைப் பெற முடியும். இந்த நாட்டில் சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் சீனக் குடியரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதிய எண்ணக்கருவுக்கு இதன் மூலம் பெரும் பலம் கிடைக்கிறது. நாம் பெற்ற அறிவை இளைஞர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்காக வழங்க முடியும். என தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.