திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நடுவூற்று கிராமத்தில் திறக்கப்படவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையத்தை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார இன்று (09)நேரடி விஜயம் செய்து பார்வையிட்டார்.
குறித்த கட்டிட பணி சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தர்சனி கருணாரத்ன மற்றும் மேலதிகப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இதனை பார்வையிட்டனர்.
மாற்றுத் திறனாளிகளின் விசேட திறன்களை மேம்படுத்தவும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மாதமளவில் குறித்த கட்டிடம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது
கட்டிடத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் போன்றோர் மேற்பார்வை செய்தனர்.
இதன் போது குறித்த வளாகத்தில் பயன்தரும் மரங்களும் மாவட்ட செயலாளரினால் நடப்பட்டது.
இதில் மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி,மாவட்ட பொறியியலாளர்,சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர்,சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிண்ணியா பராமரிப்பு நிலைய கட்டிட அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட மாவட்ட அரச அதிபர் திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நடுவூற்று கிராமத்தில் திறக்கப்படவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையத்தை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார இன்று (09)நேரடி விஜயம் செய்து பார்வையிட்டார்.குறித்த கட்டிட பணி சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தர்சனி கருணாரத்ன மற்றும் மேலதிகப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இதனை பார்வையிட்டனர்.மாற்றுத் திறனாளிகளின் விசேட திறன்களை மேம்படுத்தவும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் மாதமளவில் குறித்த கட்டிடம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதுகட்டிடத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் போன்றோர் மேற்பார்வை செய்தனர்.இதன் போது குறித்த வளாகத்தில் பயன்தரும் மரங்களும் மாவட்ட செயலாளரினால் நடப்பட்டது.இதில் மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி,மாவட்ட பொறியியலாளர்,சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர்,சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.