• Jan 10 2026

மட்டக்களப்பு வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை!

dileesiya / Jan 9th 2026, 6:02 pm
image

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. 


இன்று அதிகாலை வேளையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், மிகத் திட்டமிட்ட முறையில் இக்கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.


கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, திருடப்பட்ட சொத்துக்களின்  பணம் சுமார் 45 இலட்சம் ரூபாவும் தங்க நகைகள்: 5 பவுன்  எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என பலவற்றை அடங்கியுள்ளதாக தெரியவருகிறது.


தடயங்களை அழித்த திருடர்கள் கொள்ளையர்கள் மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர்.


தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கடையில் பொருத்தப்பட்டிருந்த cctv கேமராக்களைச் சேதப்படுத்தியதுடன், அவற்றின் காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (சீசிரிவி) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதே வேளை  சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான ஊஊவுஏ கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையளம் காண பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், மிகத் திட்டமிட்ட முறையில் இக்கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, திருடப்பட்ட சொத்துக்களின்  பணம் சுமார் 45 இலட்சம் ரூபாவும் தங்க நகைகள்: 5 பவுன்  எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என பலவற்றை அடங்கியுள்ளதாக தெரியவருகிறது.தடயங்களை அழித்த திருடர்கள் கொள்ளையர்கள் மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர்.தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கடையில் பொருத்தப்பட்டிருந்த cctv கேமராக்களைச் சேதப்படுத்தியதுடன், அவற்றின் காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (சீசிரிவி) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதே வேளை  சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான ஊஊவுஏ கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையளம் காண பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement