எங்களது கலாச்சாரத்திற்கும் நாட்டிற்கும் பொருத்தமான முறையில் கல்வியை நவீனமயமாக்கலுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துங்கள். அதனை விடுத்து ஜேவிபிக்கோ அல்லது உங்கள் கட்சிக்கோ பொருத்தமானதாக இருக்கக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி மறுசீரமைப்பு ஆனால் உலகத்திற்கு பொருத்தமானதாக நவீன மயமாக்கலுடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். இன்று இதன் பொறுப்பை வகிக்கும் பிரதமர் தன்னால் நியமிக்கப்பட்ட குழுக்களை தன்னால் வைக்க முடியாதெனில் அதில் கதைக்க ஒன்றுமில்லை. அதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.
ஆனால் அந்தக்குழுவை நியமித்தவர் அவர் தான். குறித்த குழுவில் தவறு இடம்பெற்றிருந்தால் தானும் அதனை ஏற்றுக்கொண்டால் அதற்கு அப்பால் சென்று உரையாற்றியிருந்தால் ஏதேனும் பிரியோசனம் உள்ளதா?
கல்வி மறுசீரமமைக்கப்பட வேண்டும். ஆனால் பண்டாரநாயக்க காலப்பகுதி போன்று மறுசீரமைப்பை செய்யுங்கள். தனது உடைக்குள் புதிய துணி இருப்பதைத் தெரியாது போல் தேடுவதுதான் இந்த மறுசீரமைப்பு.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாக தவிசாளர் ஒருவர் கூறினார். எல்.ஜி.பிடி சம்பந்தமாகக் கூறினார். ஆனால் அது சம்பந்தமாக அரசாங்கம் என்ன சொன்னது.
அனர்த்த முகாமைத்துவ சுற்றுநிருபத்தில் ஒழுங்குவிதிகளை அச்சிடும் போது அந்த விடயம் காணப்படுகின்றது. 6 ஆம் தர புத்தகத்திலும் அது காணப்படுகின்றது. அது எவ்வாறு தன்னிச்சையாக இடம்பெற்ற சம்பவம் என்று கூற முடியுமா? அமைச்சுக்களின் கீழ் அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பவம் தன்னிச்சையாக நிகழுகின்றது என்று கூறமுடியாது.
அமைச்சருக்கோ, பிரதமருக்கோ, அரசாங்கத்திற்கோ, ஜனாதிபதிக்கோ ஏற்ற வகையில் அதனை செய்யக்கூடாது.
நாட்டிற்குப் பொருத்தமான வகையில் மேற்காள்ளப்படுதல் வேண்டும். அதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். அவ்வாறு மறுசீரமமைப்பு செய்யப்படும் போது பிள்ளைகளின் மனங்கள் திசைதிருப்பப்படும். ஆனால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் - என்று தெரிவித்தார்.
நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையை நவீனமயமாக்குங்கள்; ஜேவிபிக்கு பொருத்தமானதாக மாற்ற வேண்டாம் - நாமல் எங்களது கலாச்சாரத்திற்கும் நாட்டிற்கும் பொருத்தமான முறையில் கல்வியை நவீனமயமாக்கலுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துங்கள். அதனை விடுத்து ஜேவிபிக்கோ அல்லது உங்கள் கட்சிக்கோ பொருத்தமானதாக இருக்கக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி மறுசீரமைப்பு ஆனால் உலகத்திற்கு பொருத்தமானதாக நவீன மயமாக்கலுடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். இன்று இதன் பொறுப்பை வகிக்கும் பிரதமர் தன்னால் நியமிக்கப்பட்ட குழுக்களை தன்னால் வைக்க முடியாதெனில் அதில் கதைக்க ஒன்றுமில்லை. அதை அவரும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்தக்குழுவை நியமித்தவர் அவர் தான். குறித்த குழுவில் தவறு இடம்பெற்றிருந்தால் தானும் அதனை ஏற்றுக்கொண்டால் அதற்கு அப்பால் சென்று உரையாற்றியிருந்தால் ஏதேனும் பிரியோசனம் உள்ளதா கல்வி மறுசீரமமைக்கப்பட வேண்டும். ஆனால் பண்டாரநாயக்க காலப்பகுதி போன்று மறுசீரமைப்பை செய்யுங்கள். தனது உடைக்குள் புதிய துணி இருப்பதைத் தெரியாது போல் தேடுவதுதான் இந்த மறுசீரமைப்பு. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாக தவிசாளர் ஒருவர் கூறினார். எல்.ஜி.பிடி சம்பந்தமாகக் கூறினார். ஆனால் அது சம்பந்தமாக அரசாங்கம் என்ன சொன்னது. அனர்த்த முகாமைத்துவ சுற்றுநிருபத்தில் ஒழுங்குவிதிகளை அச்சிடும் போது அந்த விடயம் காணப்படுகின்றது. 6 ஆம் தர புத்தகத்திலும் அது காணப்படுகின்றது. அது எவ்வாறு தன்னிச்சையாக இடம்பெற்ற சம்பவம் என்று கூற முடியுமா அமைச்சுக்களின் கீழ் அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பவம் தன்னிச்சையாக நிகழுகின்றது என்று கூறமுடியாது.அமைச்சருக்கோ, பிரதமருக்கோ, அரசாங்கத்திற்கோ, ஜனாதிபதிக்கோ ஏற்ற வகையில் அதனை செய்யக்கூடாது. நாட்டிற்குப் பொருத்தமான வகையில் மேற்காள்ளப்படுதல் வேண்டும். அதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். அவ்வாறு மறுசீரமமைப்பு செய்யப்படும் போது பிள்ளைகளின் மனங்கள் திசைதிருப்பப்படும். ஆனால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் - என்று தெரிவித்தார்.