• Jan 10 2026

பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம்! பிரதமர் அறிவிப்பு

Chithra / Jan 9th 2026, 2:41 pm
image


இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது, இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

 

இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

 

தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விசார் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

 

பாடப்புத்தகங்கள் அல்லது கற்றல் தொகுதிகளில் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த இணையதள முகவரிகள் மற்றும் கியூ.ஆர். குறியீடுகள் இனிவரும் காலங்களில் முழுமையாக நிறுத்தப்படும். 

 

தற்போது கற்றல் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் எவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

 

அரசாங்க இணையதளங்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் அல்லது கொள்முதல் தொடர்பான சிக்கல்கள் எதுவும் எழவில்லை என்பதையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.


இதேவேளை 2019, 2024 ஆம் ஆz;டுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்  தெரிவித்தார்.


பல்வேறு காரணங்களுக்காக முந்தைய அரசாங்கங்களின் போது மீளப் பெறப்பட்ட வழக்குகள், அவற்றை மறுபரிசீலனை செய்த பின்னர் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதே நேரத்தில் மேலும் மூன்று வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம் பிரதமர் அறிவிப்பு இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது, இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விசார் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  பாடப்புத்தகங்கள் அல்லது கற்றல் தொகுதிகளில் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த இணையதள முகவரிகள் மற்றும் கியூ.ஆர். குறியீடுகள் இனிவரும் காலங்களில் முழுமையாக நிறுத்தப்படும்.  தற்போது கற்றல் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் எவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  அரசாங்க இணையதளங்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் அல்லது கொள்முதல் தொடர்பான சிக்கல்கள் எதுவும் எழவில்லை என்பதையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.இதேவேளை 2019, 2024 ஆம் ஆz;டுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்  தெரிவித்தார்.பல்வேறு காரணங்களுக்காக முந்தைய அரசாங்கங்களின் போது மீளப் பெறப்பட்ட வழக்குகள், அவற்றை மறுபரிசீலனை செய்த பின்னர் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதே நேரத்தில் மேலும் மூன்று வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement