ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலக்கரி டெண்டர் கொடுக்கல், வாங்கல் முற்றிலும் ஊழல் நிறைந்தது என்பதை தாம் நிரூபிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து விவாதிக்க வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சியின் முதல் வாரத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர், அண்மையில் பாராளுமன்றில் பாரிய அளவிலான நிலக்கரி மோசடி குறித்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
பொதுவாக ஏப்ரல் மாதம் கோரப்பட வேண்டிய நிலக்கரி டெண்டரானது செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முதல் இரண்டு நிலக்கரி கப்பல்களின் Calorific value 5600-5800 என்ற மட்டத்தில் இருப்பதாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி டெண்டர் வழிகாட்டல்களின்படி, இப்பெறுமதி சுமார் 5900 ஆக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால் ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால் விடுத்துள்ளார். இந்த நிலக்கரி டெண்டர் கொடுக்கல், வாங்கல் முற்றிலும் ஊழல் நிறைந்தது என்பதை தாம் நிரூபிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து விவாதிக்க வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சியின் முதல் வாரத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர், அண்மையில் பாராளுமன்றில் பாரிய அளவிலான நிலக்கரி மோசடி குறித்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். பொதுவாக ஏப்ரல் மாதம் கோரப்பட வேண்டிய நிலக்கரி டெண்டரானது செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முதல் இரண்டு நிலக்கரி கப்பல்களின் Calorific value 5600-5800 என்ற மட்டத்தில் இருப்பதாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி டெண்டர் வழிகாட்டல்களின்படி, இப்பெறுமதி சுமார் 5900 ஆக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.