• Jan 10 2026

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்! வடகிழக்கில் கடும் வேகத்தில் காற்று வீசும்

Chithra / Jan 9th 2026, 5:37 pm
image


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று  மாலை விடுத்துள்ள எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பிற்கு அமைய வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 


இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. 


நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.  ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.  சில சந்தர்ப்பங்களில் இது 70 கி.மீ வேகத்திலான கடும் காற்றாக அதிகரிக்கலாம். 


வடமேல், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



இதேவேளை இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் மழையால் கலா ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளது.


சீரற்ற வானிலை நிலவுவதைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள 10 வான் கதவுகளில் 4 கதவுகளை தலா ஒரு அடி வீதம் தொடர்ந்தும் திறந்து வைக்க நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும் வடகிழக்கில் கடும் வேகத்தில் காற்று வீசும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று  மாலை விடுத்துள்ள எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பிற்கு அமைய வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.  ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.  சில சந்தர்ப்பங்களில் இது 70 கி.மீ வேகத்திலான கடும் காற்றாக அதிகரிக்கலாம். வடமேல், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.இதேவேளை இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் மழையால் கலா ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளது.சீரற்ற வானிலை நிலவுவதைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள 10 வான் கதவுகளில் 4 கதவுகளை தலா ஒரு அடி வீதம் தொடர்ந்தும் திறந்து வைக்க நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement