விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற அதிமுக பிரச்சாரத்தின் போது கூட்டத்திற்குள் கார் ஒன்று நுழைந்ததில் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.
“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்னும் தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
அதன்போது காரியாபட்டி பேரூராட்சியின் திமுக தலைவர் செந்திலின் சகோதரரின் கார் உள்ளு நுழைந்ததால் அதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.
ஆவேசமடைந்த தொண்டர்கள் காரிற்கு அருகே சென்ற வேளையில் திமுக தலைவர் செந்திலின் சகோதரரின் மகனான சிறுவன் உள்ளே இருந்துள்ளார்.
காருக்குள் சிறுவன் மூச்சுத் திணறிய நிலையில் இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுவன் மூச்சுத்திணறியதையடுத்து தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் திமுக தலைவரின் சகோதரர் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் காரை செலுத்திச் சென்றது குறித்த சிறுவன் தான் என்றும் அந்த சிறுவன் உடல்நலத்துடன் இருப்பதாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சுத்திணறல் போன்று அந்த சிறுவன் நடித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரச்சாரத்திற்கு காரை ஓட்டிச்சென்ற திமுக தலைவரின் சகோதரர் மகன்; கூட்டத்திற்குள் நுழைந்த கார் - அதிமுக தொண்டர்கள் ஆவேசம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற அதிமுக பிரச்சாரத்தின் போது கூட்டத்திற்குள் கார் ஒன்று நுழைந்ததில் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்னும் தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றிக்கொண்டிருந்தார். அதன்போது காரியாபட்டி பேரூராட்சியின் திமுக தலைவர் செந்திலின் சகோதரரின் கார் உள்ளு நுழைந்ததால் அதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ஆவேசமடைந்த தொண்டர்கள் காரிற்கு அருகே சென்ற வேளையில் திமுக தலைவர் செந்திலின் சகோதரரின் மகனான சிறுவன் உள்ளே இருந்துள்ளார். காருக்குள் சிறுவன் மூச்சுத் திணறிய நிலையில் இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவன் மூச்சுத்திணறியதையடுத்து தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் திமுக தலைவரின் சகோதரர் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் காரை செலுத்திச் சென்றது குறித்த சிறுவன் தான் என்றும் அந்த சிறுவன் உடல்நலத்துடன் இருப்பதாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத்திணறல் போன்று அந்த சிறுவன் நடித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.