• Feb 15 2026

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்! அநுரவை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி

Chithra / Jan 19th 2026, 9:54 am
image


நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றன. அதனால் நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேட்டுக்கொண்டுள்ளார்.


ஜனாதிபதி வடக்குக்கு வந்து தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் இனவாத்தை தூண்டாமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றாக எழுந்திருக்க வேண்டும்.


தெற்கில்  ஒருவிதமாகவும் வடக்குக்கு சென்று அதனை வேறு  விதமாகவும் சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுவதை தற்போதாவது நிறுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்காெள்கிறோம்.


வடக்குக்கு சென்று பாரியளவில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதனை தெற்கில் விமர்சிக்கின்றனர். 


இனவாதத்தை தூண்டுவதில்லை என அரசாங்கம் தெரிவித்துவருகின்றபோதும், ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாதத்தை தூண்டிவருகிறது. அதனால் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என தயவாக  கேட்டுக்கொள்கிறோம்.


அத்துடன் எமது நாட்டு பெளத்தர்கள், நாட்டில் இருக்கும் எந்த விகாரைக்கு வழிபடச் சென்றாலும் அவர்கள்  வைராக்கியத்துடன் செல்வதில்லை. ஜனாதிபதியே வைராக்கியத்துடன் செல்கிறார். வைராக்கியத்தை பரப்புவதும் ஜனாதிபதியும் அவரது சீடர்களுமாகும்.


நாங்கள் நாகதீபம், சிறிமாபோதி, களனி விகாரைக்கு செல்வது வழிபடுவதற்காகும். மாறாக  வைராக்கியத்துடன்  யாரும் செல்வதில்லை. வைராக்கியத்தை பரப்ப வேண்டும் என்றால்  நாகதீபத்துக்கு செல்ல தேவையில்லை, கொழும்பில் இருந்து பரப்ப முடியும்.


ஊடகங்கள் இல்லாமலே நாங்கள் தலதா வழிபடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவ்வாறா இடம்பெறுகிறது? ஊடகங்களை அழைத்துக்கொண்டே மத வழிபாடுகளுக்கு செல்கிறார்.


ஹெலிகொப்டரில் செல்வதில்லை என தெரிவித்தார்கள். ஆனால் இன்று ஹெலிகொப்டர் இரண்டு எடு்த்துச்செல்கிறார்கள்.அதனால் இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் தெரிவித்த எதனையும் செயற்படுத்துவதாக இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் அநுரவை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றன. அதனால் நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேட்டுக்கொண்டுள்ளார்.ஜனாதிபதி வடக்குக்கு வந்து தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் இனவாத்தை தூண்டாமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றாக எழுந்திருக்க வேண்டும்.தெற்கில்  ஒருவிதமாகவும் வடக்குக்கு சென்று அதனை வேறு  விதமாகவும் சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுவதை தற்போதாவது நிறுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்காெள்கிறோம்.வடக்குக்கு சென்று பாரியளவில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதனை தெற்கில் விமர்சிக்கின்றனர். இனவாதத்தை தூண்டுவதில்லை என அரசாங்கம் தெரிவித்துவருகின்றபோதும், ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாதத்தை தூண்டிவருகிறது. அதனால் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என தயவாக  கேட்டுக்கொள்கிறோம்.அத்துடன் எமது நாட்டு பெளத்தர்கள், நாட்டில் இருக்கும் எந்த விகாரைக்கு வழிபடச் சென்றாலும் அவர்கள்  வைராக்கியத்துடன் செல்வதில்லை. ஜனாதிபதியே வைராக்கியத்துடன் செல்கிறார். வைராக்கியத்தை பரப்புவதும் ஜனாதிபதியும் அவரது சீடர்களுமாகும்.நாங்கள் நாகதீபம், சிறிமாபோதி, களனி விகாரைக்கு செல்வது வழிபடுவதற்காகும். மாறாக  வைராக்கியத்துடன்  யாரும் செல்வதில்லை. வைராக்கியத்தை பரப்ப வேண்டும் என்றால்  நாகதீபத்துக்கு செல்ல தேவையில்லை, கொழும்பில் இருந்து பரப்ப முடியும்.ஊடகங்கள் இல்லாமலே நாங்கள் தலதா வழிபடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவ்வாறா இடம்பெறுகிறது ஊடகங்களை அழைத்துக்கொண்டே மத வழிபாடுகளுக்கு செல்கிறார்.ஹெலிகொப்டரில் செல்வதில்லை என தெரிவித்தார்கள். ஆனால் இன்று ஹெலிகொப்டர் இரண்டு எடு்த்துச்செல்கிறார்கள்.அதனால் இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் தெரிவித்த எதனையும் செயற்படுத்துவதாக இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement