ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் வேளையில், 44 வயதான எம்.எஸ். தோனியின் பங்களிப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது யூடியூப் தளத்தில் இது குறித்து வெளிப்படையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உட்பட யாராலும் தோனியை அணியிலிருந்து நீக்க முடியாது என பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
நிர்வாக ரீதியாக சென்னை சுப்பர் கிங்ஸ் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடத் தயார் எனக் கூறியிருக்கலாம்.
ஆனால், களத்தில் பிளெமிங் சென்று தோனியிடம் 'உங்களை இந்தப்போட்டியில் நீக்குகிறோம்' என்று சொல்ல முடியுமா? அதற்கான வாய்ப்பே இல்லை. தோனிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் முகாமில் உள்ள மரியாதையினால் அப்படி ஒரு முடிவை எடுப்பது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தோனி ஒரு 'இம்பாக்ட் பிளேயராக' (Impact Player) மட்டுமே விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பர்-பேட்டராகத் தொடர்வாரா என்பது குறித்து பயிற்சியாளர் குழுவே தீர்மானிக்கும் என சிஎஸ்கே தலைமை அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்பதில் தனக்கு எவ்வித ஐயமும் இல்லை என பத்ரிநாத் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025 தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இம்முறை சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை உள்வாங்கியுள்ள நிலையில், தோனியின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியில் நடக்கப்போகும் மாற்றம் என்ன தெரியுமா ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் வேளையில், 44 வயதான எம்.எஸ். தோனியின் பங்களிப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது யூடியூப் தளத்தில் இது குறித்து வெளிப்படையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உட்பட யாராலும் தோனியை அணியிலிருந்து நீக்க முடியாது என பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.நிர்வாக ரீதியாக சென்னை சுப்பர் கிங்ஸ் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடத் தயார் எனக் கூறியிருக்கலாம்.ஆனால், களத்தில் பிளெமிங் சென்று தோனியிடம் 'உங்களை இந்தப்போட்டியில் நீக்குகிறோம்' என்று சொல்ல முடியுமா அதற்கான வாய்ப்பே இல்லை. தோனிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் முகாமில் உள்ள மரியாதையினால் அப்படி ஒரு முடிவை எடுப்பது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தோனி ஒரு 'இம்பாக்ட் பிளேயராக' (Impact Player) மட்டுமே விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பர்-பேட்டராகத் தொடர்வாரா என்பது குறித்து பயிற்சியாளர் குழுவே தீர்மானிக்கும் என சிஎஸ்கே தலைமை அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.எனினும், தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்பதில் தனக்கு எவ்வித ஐயமும் இல்லை என பத்ரிநாத் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2025 தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இம்முறை சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை உள்வாங்கியுள்ள நிலையில், தோனியின் அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.