• Jan 22 2025

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி - குற்றம்சாட்டும் மருத்துவர்கள் கூட்டணி

Chithra / Jan 12th 2025, 9:16 am
image

 

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம் வழங்கியதாக, சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் மருத்தவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும்,கிருமிநாசினி போத்தல்களை வாங்க கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.

இதன்படி 2024 டிசம்பர் 12 அன்று ஒரு முடிவு எட்டப்பட்டது, மிகக் குறைந்த ஏலதாரருக்கு இந்த கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டது.

எனினும், கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட இந்த நிறுவனம் முன்னர், இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம் என்று மருத்துவர் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு 127 மில்லியன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் மருத்துவர் சஞ்சீவ கூறியுள்ளார் .

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி - குற்றம்சாட்டும் மருத்துவர்கள் கூட்டணி  நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம் வழங்கியதாக, சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் மருத்தவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஜூன் மாதம், நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும்,கிருமிநாசினி போத்தல்களை வாங்க கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.இதன்படி 2024 டிசம்பர் 12 அன்று ஒரு முடிவு எட்டப்பட்டது, மிகக் குறைந்த ஏலதாரருக்கு இந்த கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டது.எனினும், கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட இந்த நிறுவனம் முன்னர், இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம் என்று மருத்துவர் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன் இந்த நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு 127 மில்லியன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் மருத்துவர் சஞ்சீவ கூறியுள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement