• Nov 23 2024

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் குதித்த கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்!

Chithra / Nov 5th 2024, 9:22 am
image


காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 

இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தியசாலையில் பணிப்பாளர்,

குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்தியரை இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்துள்ளது. 

அதன்படி, வைத்தியரை மஹரகம வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் இன்று பிறப்பிக்கப்படும் என்றார்.

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் குதித்த கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார்.இப்பிரச்சினை தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தியசாலையில் பணிப்பாளர்,குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்தியரை இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்துள்ளது. அதன்படி, வைத்தியரை மஹரகம வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் இன்று பிறப்பிக்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement