• Apr 27 2024

முடிவை மாற்றிய வைத்தியர்கள் - கைவிடப்பட்ட வேலை இடை நிறுத்தம்..!samugammedia

mathuri / Jan 23rd 2024, 9:03 pm
image

Advertisement

அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நாளை மேற்கொள்ளவிருந்த தமது தொழிற்சங்கப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கான மேலதிக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக  நிறுத்தப்பட்டதை எதிர்த்து சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நாளை (24.01.2024) காலை 08 மணி முதல் முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

" சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் DAT கொடுப்பனவை ஜனவரி மாத சம்பளத்துடன் இணைத்து வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ள சுற்றுநிருபத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு சுகாதார நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சற்று முன்னர் எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஜனவரி மாத சம்பளத்துடன் DAT கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாது போகும் மருத்துவர்களுக்கு தனியான வவுச்சர் மூலம் குறித்த கொடுப்பனவை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது." என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமகா நாளை காலை தொடக்கம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருந்த நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்தை உடனடியாக இடைநிறுத்த அரசாங்க மருத்துவர்கள் சங்கத்த்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.





முடிவை மாற்றிய வைத்தியர்கள் - கைவிடப்பட்ட வேலை இடை நிறுத்தம்.samugammedia அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நாளை மேற்கொள்ளவிருந்த தமது தொழிற்சங்கப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.மருத்துவர்களுக்கான மேலதிக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக  நிறுத்தப்பட்டதை எதிர்த்து சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நாளை (24.01.2024) காலை 08 மணி முதல் முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.இந்த நிலையில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. " சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் DAT கொடுப்பனவை ஜனவரி மாத சம்பளத்துடன் இணைத்து வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ள சுற்றுநிருபத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு சுகாதார நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சற்று முன்னர் எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதே போன்று ஜனவரி மாத சம்பளத்துடன் DAT கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாது போகும் மருத்துவர்களுக்கு தனியான வவுச்சர் மூலம் குறித்த கொடுப்பனவை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது." என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமகா நாளை காலை தொடக்கம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருந்த நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்தை உடனடியாக இடைநிறுத்த அரசாங்க மருத்துவர்கள் சங்கத்த்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement