• Nov 25 2024

இஸ்ரேலில் இருந்து கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்களை அனுப்ப அரசு விரும்புகிறதா? - கேள்வியெழுப்பிய முக்கியஸ்தர்

Chithra / Dec 10th 2023, 12:28 pm
image



கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதை அரசாங்கம் விரும்புகின்றதா என்று ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினை மிக பாரிய உலக நெருக்கடியாக தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இலங்கையில் நிலவி வருகின்ற டொலர் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் தற்போது பாரிய இரும்புக் கோட்டை போல் உள்ளது. 

முன்பு இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்த பாலஸ்தீனர்களுக்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவே இலங்கையர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. 

இஸ்ரேலில் இறந்த இலங்கையர்களின் உடலங்கள் சில ஏற்கனவே நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை சிறியளவில் பதற்றத்தை ஏற்படுத்த செய்தன. 

ஆனால் கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட நேருமானால், மிக மிக மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும்.

மேற்கத்தேய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் மொசாட்டின் கழுகு பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது என்று சந்தேகிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூகோள அரசியலை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இவற்றை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று கிடையாது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்களை அனுப்ப அரசு விரும்புகிறதா - கேள்வியெழுப்பிய முக்கியஸ்தர் கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதை அரசாங்கம் விரும்புகின்றதா என்று ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினை மிக பாரிய உலக நெருக்கடியாக தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நிலவி வருகின்ற டொலர் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் தற்போது பாரிய இரும்புக் கோட்டை போல் உள்ளது. முன்பு இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்த பாலஸ்தீனர்களுக்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவே இலங்கையர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. இஸ்ரேலில் இறந்த இலங்கையர்களின் உடலங்கள் சில ஏற்கனவே நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை சிறியளவில் பதற்றத்தை ஏற்படுத்த செய்தன. ஆனால் கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட நேருமானால், மிக மிக மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும்.மேற்கத்தேய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் மொசாட்டின் கழுகு பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது என்று சந்தேகிக்கின்றோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூகோள அரசியலை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இவற்றை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று கிடையாது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement