• Feb 12 2026

4 நாட்களாக அனுமன் சிலையைச் சுற்றி வரும் நாய்!

dileesiya / Jan 16th 2026, 5:53 pm
image

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் இடம்பெற்ற ஒரு விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.


நாகினா தாலுகாவில் உள்ள நந்த்பூர் கிராமத்தின் பழமையான அனுமன் கோவிலில், கடந்த நான்கு நாட்களாக ஒரு நாய் இடைவிடாது அனுமன் சிலையைச் சுற்றி வருவது மக்களிடையே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.


குறித்த நாய் 72 மணி நேரத்திற்கும் மேலாக உணவோ, தண்ணீரோ எதையும் எடுத்துக்கொள்ளாமல் சிலையைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. 


இதனால் கோவிலுக்கு அருகிலுள்ள கிராமங்கள் மட்டுமன்றி, தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்தக் காட்சியைக் காண வருகை தருகின்றனர்.


சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.


சில கிராமவாசிகள் இதை ஒரு தெய்வீக அறிகுறி அல்லது பக்தியின் வெளிப்பாடு என நம்புகின்றனர். சிலர் மேலும் ஒரு படி முன்னேறி, அந்த நாயை பைரவ் பாபாவின் அவதாரமாகக் கருதி வணங்கத் தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற விலங்கு நடத்தைகள் குறித்து அறிவியலாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வேறுபட்ட விளக்கங்களை முன்வைக்கின்றனர்.


மனஅழுத்தம், திசை உணர்வு கோளாறு, நரம்பியல் பிரச்சினைகள், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் காரணமாக விலங்குகள் ஒரே இடத்தில் வட்டமாகச் சுழலும் பழக்கத்தை வெளிப்படுத்தக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


அதே நேரத்தில், நாய் நீண்ட நேரம் உணவும் நீரும் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுவதால், அதன் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, கால்நடை மருத்துவ பரிசோதனை அவசியம் எனவும் சிலர் வலியுறுத்துகின்றனர்.

https://www.facebook.com/share/v/182957LHWG/


4 நாட்களாக அனுமன் சிலையைச் சுற்றி வரும் நாய் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் இடம்பெற்ற ஒரு விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.நாகினா தாலுகாவில் உள்ள நந்த்பூர் கிராமத்தின் பழமையான அனுமன் கோவிலில், கடந்த நான்கு நாட்களாக ஒரு நாய் இடைவிடாது அனுமன் சிலையைச் சுற்றி வருவது மக்களிடையே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.குறித்த நாய் 72 மணி நேரத்திற்கும் மேலாக உணவோ, தண்ணீரோ எதையும் எடுத்துக்கொள்ளாமல் சிலையைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு அருகிலுள்ள கிராமங்கள் மட்டுமன்றி, தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்தக் காட்சியைக் காண வருகை தருகின்றனர்.சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.சில கிராமவாசிகள் இதை ஒரு தெய்வீக அறிகுறி அல்லது பக்தியின் வெளிப்பாடு என நம்புகின்றனர். சிலர் மேலும் ஒரு படி முன்னேறி, அந்த நாயை பைரவ் பாபாவின் அவதாரமாகக் கருதி வணங்கத் தொடங்கியுள்ளனர்.இதுபோன்ற விலங்கு நடத்தைகள் குறித்து அறிவியலாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வேறுபட்ட விளக்கங்களை முன்வைக்கின்றனர்.மனஅழுத்தம், திசை உணர்வு கோளாறு, நரம்பியல் பிரச்சினைகள், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் காரணமாக விலங்குகள் ஒரே இடத்தில் வட்டமாகச் சுழலும் பழக்கத்தை வெளிப்படுத்தக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.அதே நேரத்தில், நாய் நீண்ட நேரம் உணவும் நீரும் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுவதால், அதன் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, கால்நடை மருத்துவ பரிசோதனை அவசியம் எனவும் சிலர் வலியுறுத்துகின்றனர்.https://www.facebook.com/share/v/182957LHWG/

Advertisement

Advertisement

Advertisement