• Jan 08 2025

தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் வரி - உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிருப்தி!

Chithra / Jan 2nd 2025, 7:56 am
image

 

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மில்லியன் கிலோ தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய முறையில் விற்பனை செய்யப்படாத காரணத்தினால் வற் வரியை அறவீடு செய்யவும் முடியவில்லை.

இதனால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் பதவிக்கு வர முன்னதாக உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கினாலும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த உறுதிமொழிகள் வெறும் வார்த்தைகளுக்கு வரையறுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் வரி - உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிருப்தி  உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மில்லியன் கிலோ தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய முறையில் விற்பனை செய்யப்படாத காரணத்தினால் வற் வரியை அறவீடு செய்யவும் முடியவில்லை.இதனால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.அனைத்து அரசியல் கட்சிகளும் பதவிக்கு வர முன்னதாக உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கினாலும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த உறுதிமொழிகள் வெறும் வார்த்தைகளுக்கு வரையறுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement