இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க தூதர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் ஆகியோர் பங்கேற்றனர்.
சந்திப்பின் போது, நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை, அரச மருத்துவமனைகளில் ஏற்படும் சவால்கள், மற்றும் அவற்றுக்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் தொடர்பான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் ஊடகத் துறையை மேம்படுத்தும் புதிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கான தேசிய ஊடக நிறுவனம் ஒன்றை நிறுவும் திட்டமும் இடம்பெறுவதாக அமைச்சர் கூறினார்.
இதனையடுத்து, இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக, நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ஆதரவை வழங்க அமெரிக்கா தொடர்ந்து தயாராக உள்ளது என தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.
இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் மெரிக்கா இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க தூதர் உறுதியளித்துள்ளார். இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் ஆகியோர் பங்கேற்றனர்.சந்திப்பின் போது, நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை, அரச மருத்துவமனைகளில் ஏற்படும் சவால்கள், மற்றும் அவற்றுக்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் தொடர்பான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இலங்கையில் ஊடகத் துறையை மேம்படுத்தும் புதிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கான தேசிய ஊடக நிறுவனம் ஒன்றை நிறுவும் திட்டமும் இடம்பெறுவதாக அமைச்சர் கூறினார்.இதனையடுத்து, இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக, நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ஆதரவை வழங்க அமெரிக்கா தொடர்ந்து தயாராக உள்ளது என தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.