• Mar 26 2025

ஏமாற வேண்டாம்..! இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Mar 24th 2025, 1:02 pm
image

 

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. 

அத்தகைய திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை எனவும், இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார, மக்களை வலியுறுத்தியுள்ளார். 

இக்குழுவினர் சில தனிநபர்களிடம் 1.5 மில்லியன் செலுத்துமாறும், அதில் ஒரு பகுதியை முன்பணமாக வழங்குமாறும் கேட்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் இதுபோன்ற எந்தவொரு விசா வழங்கும் செயல்முறையிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

ஏமாற வேண்டாம். இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை  இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை எனவும், இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார, மக்களை வலியுறுத்தியுள்ளார். இக்குழுவினர் சில தனிநபர்களிடம் 1.5 மில்லியன் செலுத்துமாறும், அதில் ஒரு பகுதியை முன்பணமாக வழங்குமாறும் கேட்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் இதுபோன்ற எந்தவொரு விசா வழங்கும் செயல்முறையிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement