• Oct 23 2024

பொய்யான தகவல்களை நம்பவேண்டாம்..! இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

Chithra / Apr 5th 2024, 9:04 am
image

Advertisement

 

சில பெருந்தோட்ட முதலீட்டு நிறுவனங்கள் தமது நிறுவனம் இலங்கை மத்திய வங்கியினால் கணக்காய்வு செய்யப்படும் என சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கிகுறிப்பிட்டுள்ளது.

எனவே குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வங்கியின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண பரிவர்த்தனை சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, பண பரிவர்த்தனை சட்டத்தின் 02 வது பிரிவின் விதிகளை மீறி, சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட முதலீட்டு நிறுவனங்கள் வைப்புகளை ஏற்றுக்கொள்கின்றதா அல்லது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொய்யான தகவல்களை நம்பவேண்டாம். இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை  சில பெருந்தோட்ட முதலீட்டு நிறுவனங்கள் தமது நிறுவனம் இலங்கை மத்திய வங்கியினால் கணக்காய்வு செய்யப்படும் என சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.இது தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கிகுறிப்பிட்டுள்ளது.எனவே குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வங்கியின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பண பரிவர்த்தனை சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, பண பரிவர்த்தனை சட்டத்தின் 02 வது பிரிவின் விதிகளை மீறி, சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட முதலீட்டு நிறுவனங்கள் வைப்புகளை ஏற்றுக்கொள்கின்றதா அல்லது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement