• Dec 09 2024

தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என தமிழ் மக்கள் உணர்ந்துவிட்டார்கள் - டக்ளஸ் தேவானந்தா

Tharmini / Oct 22nd 2024, 2:09 pm
image

தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எமது வளிமுறைகளை ஏற்று அரசியல் பலத்தை வழங்க அணிதிரளவெண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்ட மக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்ததிருந்தார். 

இதன்போது அவர் மேலும் கருத்து கூறுகையில், தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியமாக்கவும் எண்ணுகின்றார்கள். மக்களின் இந்த அரசியல் தெளிவும் மன மாற்றமும் வரவேற்கத்தக்கது. இதேநேரம் தமிழ் மக்களை பொறுத்தளவில் புலிகளின் அச்சுறுத்தல் அதிகார பலத்துடன் தமிழரசுக் கட்சியின் நிழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் 2004 இல் 22 ஆசனங்களை கொடுத்தும் அதன்பின்னரான காலங்களில் 16,10 என தமது  பிலாசைகளை பெற்றுத்தருமாறு ஆணை வழங்கியிருந்தனர். ஆனாலும் அதை பெற்றுக்கொண்ட குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தத்தமது சுகபோகங்களை அனுபவித்ததார்களே தவிர தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கவில்லை.

இதேநேரம் இன்று அந்த கூட்டமைப்பு என்ற ஒன்று தேர்தல்களத்தில் இல்லாதும் போய்விட்டது. இதேநேரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகளின் தொகையை பார்க்கும்போது, குறிப்பாக குறித்த கூட்டமைப்பினர் சிதறுண்டு இன்று வெவ்வோறு சின்னங்களில் போட்டியிடுவதை பார்க்கும்போது அது மக்கள் நலன்களுக்கானதாக அன்றி தத்தமது பதவிக்கான ஒன்றாகவே எண்ணமுடிகின்றது.

இந்நிலையில் தற்போதும் ஒரு அரசியல் மாற்றத்துக்கான சூழ்நிலை வந்துள்ளது.குறிப்பாக அந்த மாற்றம் போலித் தேசிய தரப்பினரிடமிருந்து விடுபட்டு தடுமாறாத கொள்கையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் கொண்ட ஈ.பி.டி.பியினரது எமது பக்கமாக வீசுவதே தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்கும்.

இது ஒவ்வொரு தமிழ் மக்களின் ஆத்மாக்களின் உள்ளங்களிலும் வலுப்பெறும் என்று நம்புகின்றேன். இதேவேளை தமிழர்களின் அரசியலில் மிக முக்கியமான தருணமாக இது உள்ளது. அதனால்  தமிழ் மக்கள் தமது வாக்குரிமை என்ற ஆதிகாரத்தைக் கொண்டு வீணைச் சின்னத்தை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அது இம்முறை நிகழும் என்று நம்பிக்கை தெரிவித்த செயலாளர் நாயகம் அதனூடாக தமிழ் மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை தன்னால் உருவாக்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என தமிழ் மக்கள் உணர்ந்துவிட்டார்கள் - டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எமது வளிமுறைகளை ஏற்று அரசியல் பலத்தை வழங்க அணிதிரளவெண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்ட மக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்ததிருந்தார். இதன்போது அவர் மேலும் கருத்து கூறுகையில், தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியமாக்கவும் எண்ணுகின்றார்கள். மக்களின் இந்த அரசியல் தெளிவும் மன மாற்றமும் வரவேற்கத்தக்கது. இதேநேரம் தமிழ் மக்களை பொறுத்தளவில் புலிகளின் அச்சுறுத்தல் அதிகார பலத்துடன் தமிழரசுக் கட்சியின் நிழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் 2004 இல் 22 ஆசனங்களை கொடுத்தும் அதன்பின்னரான காலங்களில் 16,10 என தமது  அபிலாசைகளை பெற்றுத்தருமாறு ஆணை வழங்கியிருந்தனர். ஆனாலும் அதை பெற்றுக்கொண்ட குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தத்தமது சுகபோகங்களை அனுபவித்ததார்களே தவிர தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கவில்லை.இதேநேரம் இன்று அந்த கூட்டமைப்பு என்ற ஒன்று தேர்தல்களத்தில் இல்லாதும் போய்விட்டது. இதேநேரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகளின் தொகையை பார்க்கும்போது, குறிப்பாக குறித்த கூட்டமைப்பினர் சிதறுண்டு இன்று வெவ்வோறு சின்னங்களில் போட்டியிடுவதை பார்க்கும்போது அது மக்கள் நலன்களுக்கானதாக அன்றி தத்தமது பதவிக்கான ஒன்றாகவே எண்ணமுடிகின்றது.இந்நிலையில் தற்போதும் ஒரு அரசியல் மாற்றத்துக்கான சூழ்நிலை வந்துள்ளது.குறிப்பாக அந்த மாற்றம் போலித் தேசிய தரப்பினரிடமிருந்து விடுபட்டு தடுமாறாத கொள்கையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் கொண்ட ஈ.பி.டி.பியினரது எமது பக்கமாக வீசுவதே தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்கும்.இது ஒவ்வொரு தமிழ் மக்களின் ஆத்மாக்களின் உள்ளங்களிலும் வலுப்பெறும் என்று நம்புகின்றேன். இதேவேளை தமிழர்களின் அரசியலில் மிக முக்கியமான தருணமாக இது உள்ளது. அதனால்  தமிழ் மக்கள் தமது வாக்குரிமை என்ற ஆதிகாரத்தைக் கொண்டு வீணைச் சின்னத்தை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அது இம்முறை நிகழும் என்று நம்பிக்கை தெரிவித்த செயலாளர் நாயகம் அதனூடாக தமிழ் மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை தன்னால் உருவாக்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement