• Apr 22 2025

புகார் தெரிவிப்பதற்கு தயங்க வேண்டாம்! பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Bus
Chithra / Apr 20th 2025, 2:22 pm
image

 

புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளிடம், நீண்ட தூர சேவை பேருந்துகளால் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகளால் ஏற்படும் அநீதிகள் குறித்து சுமார் 200 புகார்கள் தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு கிடைத்துள்ளது.

அந்த ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் நவோமி ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

 தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தொலைபேசி இலக்கமான 1955இற்கு கிடைக்க பெற்ற இந்த புகார்கள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது குறித்து 63 புகார்கள் பெறப்பட்டன,  

இது தவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்காதது தொடர்பாக 38 புகார்களும், பயணிகளிடம் கண்ணியமாக பேசாதது தொடர்பாக 28 புகார்களும் வந்துள்ளன.

இந்த ஆண்டில் நீண்ட தூர சேவை பேருந்துகள் செய்த குற்றங்கள் குறித்து ஆணையத்திடம் புகார் தெரிவிப்பதற்கு பயணிகள் தயங்க வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார். 

புகார் தெரிவிப்பதற்கு தயங்க வேண்டாம் பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு  புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளிடம், நீண்ட தூர சேவை பேருந்துகளால் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகளால் ஏற்படும் அநீதிகள் குறித்து சுமார் 200 புகார்கள் தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு கிடைத்துள்ளது.அந்த ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் நவோமி ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தொலைபேசி இலக்கமான 1955இற்கு கிடைக்க பெற்ற இந்த புகார்கள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது குறித்து 63 புகார்கள் பெறப்பட்டன,  இது தவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்காதது தொடர்பாக 38 புகார்களும், பயணிகளிடம் கண்ணியமாக பேசாதது தொடர்பாக 28 புகார்களும் வந்துள்ளன.இந்த ஆண்டில் நீண்ட தூர சேவை பேருந்துகள் செய்த குற்றங்கள் குறித்து ஆணையத்திடம் புகார் தெரிவிப்பதற்கு பயணிகள் தயங்க வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement