அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அக்குரேகொடவில் இரட்டைக் கொலை - சகோதரர்கள் இருவர் கைது அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.