• Jun 04 2026

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இரட்டை நிலைப்பாடு: இளைஞன் கைது; எம்.பி.க்களுக்கு சலுகை! நாமல் சாடல்

Chithra / Jun 4th 2026, 12:52 pm
image

அரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாரபட்சமான முறையில், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


தற்போதைய ஆட்சியின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


குறித்த பதிவில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர், தனது 'ராப்' பாடல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


இசை மற்றும் கலைசார் வெளிப்பாடுகள் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமாயின், அண்மையில் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது இதே சட்டங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான பாடல்களைச் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்திருந்தார். அப்படியாயின், அப்போது பொலிஸ் எங்கே இருந்தது? பயங்கரவாதத் தடைச்சட்டம் எங்கே போனது? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


சட்டத்தின்படி விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கமாகும். அந்த அமைப்பின் கொள்கைகளை எவரும் பரப்புவதையோ அல்லது மகிமைப்படுத்துவதையோ நாம் ஆதரிக்கவில்லை என்பதில் எமது நிலைப்பாடு தெளிவானது.


எனினும், ஒரு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு சாதாரண இளம் கலைஞரும் ஒரே மாதிரியான செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்பும், மற்றவருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதும் வழங்கப்படுவது முற்றிலும் தவறானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சட்டமானது அரசியல் வசதிகளுக்கு ஏற்ப வளைக்கப்படக் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும், சாதாரண இளைஞர்களுக்கு வேறொரு நீதியும் வழங்குவதை ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இரட்டை நிலைப்பாடு: இளைஞன் கைது; எம்.பி.க்களுக்கு சலுகை நாமல் சாடல் அரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாரபட்சமான முறையில், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தற்போதைய ஆட்சியின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர், தனது 'ராப்' பாடல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.இசை மற்றும் கலைசார் வெளிப்பாடுகள் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமாயின், அண்மையில் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது இதே சட்டங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான பாடல்களைச் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்திருந்தார். அப்படியாயின், அப்போது பொலிஸ் எங்கே இருந்தது பயங்கரவாதத் தடைச்சட்டம் எங்கே போனது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.சட்டத்தின்படி விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கமாகும். அந்த அமைப்பின் கொள்கைகளை எவரும் பரப்புவதையோ அல்லது மகிமைப்படுத்துவதையோ நாம் ஆதரிக்கவில்லை என்பதில் எமது நிலைப்பாடு தெளிவானது.எனினும், ஒரு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு சாதாரண இளம் கலைஞரும் ஒரே மாதிரியான செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்பும், மற்றவருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதும் வழங்கப்படுவது முற்றிலும் தவறானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சட்டமானது அரசியல் வசதிகளுக்கு ஏற்ப வளைக்கப்படக் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும், சாதாரண இளைஞர்களுக்கு வேறொரு நீதியும் வழங்குவதை ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement