• Sep 21 2024

டக்ளஸ் ஆல் முடியவே முடியாது – அலி சப்பிரியிடம் வேண்டுகோள் விடுத்த சார்ள்ஸ் !! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 3:01 pm
image

Advertisement

இந்தியாவின் தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.


எனவே வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் தலையிட்டு இருநாடுகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடுகளை தீர்க்கவேண்டும் என்றும் அவர் சபையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்திய மீனவர்களின் உள்வருகையை ஓரளவு தடுத்திருந்தாகவும் ஆனால் தற்போதைய கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.


எனவே வெளிவிவகார அமைச்சர் இதில் தலையிடவேண்டும் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.


இந்தியாவின், தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக இந்த முரண்பாடுகள் இடம்பெறுவதாகவும் எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை வெளிவிவகார அமைச்சர் வழங்கவேண்டும் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.


கடற்தொழல், அமைச்சால் இந்த விடையத்தை கையாள முடியாது என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.


தாயும், பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டிருந்தார்.

 

டக்ளஸ் ஆல் முடியவே முடியாது – அலி சப்பிரியிடம் வேண்டுகோள் விடுத்த சார்ள்ஸ் SamugamMedia இந்தியாவின் தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் தலையிட்டு இருநாடுகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடுகளை தீர்க்கவேண்டும் என்றும் அவர் சபையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்திய மீனவர்களின் உள்வருகையை ஓரளவு தடுத்திருந்தாகவும் ஆனால் தற்போதைய கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.எனவே வெளிவிவகார அமைச்சர் இதில் தலையிடவேண்டும் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.இந்தியாவின், தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக இந்த முரண்பாடுகள் இடம்பெறுவதாகவும் எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை வெளிவிவகார அமைச்சர் வழங்கவேண்டும் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.கடற்தொழல், அமைச்சால் இந்த விடையத்தை கையாள முடியாது என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.தாயும், பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement